Skip to main content

Posts

Showing posts from January, 2016

விபத்தில் வீழ்ந்த விருட்சத்தின் விதை #வெமுலா

எனக்கு ரோஹித் வெமுலாவின் தற்கொலை பற்றி எழுத ஆரம்பித்தபின்பு எனது இந்துத்துவ முகநூல் எழுத்தாளர்கள், மோடி ஆதரவாளர்கள், வலதுசாரிகள் மீதான ஒப்பீனியனே முற்றிலுமாக மாறிவிட்டது என்று சொல்லலாம். சில தினங்களுக்கு முன்பு கொஞ்சம் கோபமாக எங்கள் சீனியர் எழுத்தாளர் திரு பாமரன் பாமரன் தமிழ்நாடு அவர்களுக்கு செல்பேசியில் கூப்பிட்டேன். “என்ன செல்லா, என்ன விசயம்” என்று கேட்டார் . .இல்லை நான் புத்த மதத்துக்கு மாறவேண்டும்.. வழிமுறைகள் சொல்லுங்கள் என்றேன். நிச்சயம் அவரது ஈழ (இலங்கை என்று எழுதினால் இன்றும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார் ) நிலைப்பாடுகள் தெரிந்த அனைவருக்கும் புரியும் இது ஒன்றும் அவருக்கு விருப்பமானதாக இருக்காது என்று. இருந்தாலும் ஒரு உண்மையான பெரியாரிய சிந்தனையாளர் என்பதால் நானும் கேட்டேன்.. அவரும் எதையும் காண்பிக்காமல்.. தோழனே ஒரு ரெண்டுநாள் டைம் கொடுங்க... கேட்டுட்டு சொல்றேன் என்றார். இன்றுவரை கூப்பிடவில்லை வழக்கம்போல ! இப்பொழுது அது மேட்டர் அல்ல.. அந்த அளவுக்கு என்னை தள்ளியது எது என்று யோசிக்கிறேன். அது இந்த இளம் ஆராய்ச்சியாளனின் மரணத்தை ”மத்திய மனித வள மேம்பாட்டு” இராணி ம

சுக்கு காபி, காப்பித்தண்ணி, போஸ்ட் மாடர்னிசம்

ஒரு ஊருல ஒரு தனிக்கட்டை இருந்தானாம். அவன் தானே தனக்குத் தெரிஞ்சமுறையில சுல்லி, பன்னாடை, விறகெல்லாம் வச்சு, மூணுகல் அடுப்புக்கூட்டி, சுக்குத்தண்ணி வச்சு அவங்க ஊரில நிறைய விளையும் தென்னையிலிருந்து கிடைக்கும் முக்கண்ணு கொட்டாங்குச்சியில ஊத்தி... சாலி'யா அவங்கூரு பாட்டை பாடிக்கிட்டே குடிப்பானாம். அவன் பக்கத்து வீட்டுக்காரனுக்கு இது புடிக்காதாம். பாக்குறவன்கிட்டயெல்லாம் இவனுக்கு எப்படி பில்டர்ல் டிகாக்சன் போட்டு காப்பி வைச்சு சாசர் ஊத்தி சிப் பன்னிக்குடிக்கனூம்னே தெரியலைன்னு கிண்டல் பன்னுவானாம். இதுனால தனிக்கட்டை கேலிகிண்டலுக்கு அப்பப்ப உட்படுத்தப்படறதும் உண்டாம். அவன் "எனக்கு எது இயல்பா தெரியுமோ அப்படித்தான் சுக்குக்காப்பி வச்சு சந்தோசமா கொட்டாங்குச்சில குடிக்கறேன்.. இவனுக்கு என்ன வந்துச்சி"ன்னு அலட்சியப்படுத்திக்கிட்டே வழமைபோல் இருந்தானாம். அப்பத்தான் ஒரு வெளியூர்க்காரன் ஊருக்கு டிராமா போடவந்தானாம். அவன்கிட்ட பக்கத்துவீட்டுகாரன் தனிக்கட்டைக்கு காப்பி ஒழுங்கா முறைப்படி போடத்தெரியலைன்னு புலம்புனானாம். அதுக்கு அந்த வெளியூர்க்காரன்... "அதெல்லாம் தப்பு.

முகநூல் & வலைப்பதிவுகள்

இனிமேல் பல ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்பு மறுபடியும் உறுதியாக வலைப்பதிவுலகில் மறுசென்மம் எடுத்துள்ளேன். ஆயிரக்கணக்கான பதிவுகளை முகநூலில் எழுதினாலும் வகை பிரிக்கவும் வழியில்லாத காலத்தால் அடித்துசெல்லும் நீரின்மீது எழுதிய எழுத்துக்களாக முகநூல் எழுத்துக்களை உணர்வதால் அதனோடு டிஜிட்டல் கல்வெட்டுகளாய் இனிவரும் காலங்களிலும் விளங்க இருக்கும் வலைப்பதிவுகளுக்கு மீண்டும் நுழைகிறேன். எனது வலைப்பூ minimalist chella dot blogspot dot in என்கிற தளத்தில் மினிமலிசம் ஸ்டைலில் வடிவமைக்கப்ப்ட்டுள்ளது. அனைவரையும் வரவேற்கிறேன்.

திராவிட நிசம்

ஒரு அய்யரையும், அய்யங்காரையும் ரிசர்வேசன் விசயத்தில் கூட நான் எதிர்க்கவில்லை சாதி சொல்லி.. இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் அவர்கள் சனத்தொகை விகிதாசாரப்படி இட ஒதுக்கீடு நல்கவேண்டும் என்பது என் கொள்கை நிலைபாடு! மற்றபடி தமிழ் என்பது வெறும் மொழியல்ல.. அது ஒரு உணர்வானால் ஆரியன் என்று அவர்களை, அதுவும் ஓரளவுக்கு படித்த சமூக மாற்றத்தை சிந்திக்கும் இக்காலத் தலைமுறையினரை ஒதுக்கிவைப்பது என்பது வரலாற்றுத் தவறாகவே முடியும்! ( 69% சதவிகித இட ஒதுக்கீடு, காஞ்சி சங்கரரை கைது செய்தது என்று சாதித்தவர் ஜெயலலிதா என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது!) நமக்கே 5 தலைமுறைக்கு முன் பிறந்த முப்பாட்டன் பேர் ஞாபகம் இல்லாதபோது இக்கால தாய்ப்பாலோடு தமிழ்பால் குடித்து வளர்ந்த (அவர்கள் வீடுகளில் சமஸ்கிருதத்திலா தாலாட்டுகிறார்கள்!) கணினி, / இணையத் தலைமுறையை 2000 ஆண்டு வரலாறு சொல்லி அவர்களின் ஆரிய பரம்பரையையே காரணம் காட்டி இவர்களையும் தண்டிப்பது எந்த வகையிலும் ஞாயமாகவோ, நேர்மையாகவோ, பகுத்தறிவாகவோ, சுயமரியாதையாகவோ எனக்குத் தெரியவில்லை. குழந்தை திருமணம் செய்த அவர்களே இனறு

அது ஒரு கனாக்காலம்

"ஹையா இன்னைக்கு கடைசிப் பரிச்சை" என்று அன்று சந்தோசமாக பள்ளிக்கு புறப்படுவேன். நானும் என் நண்பன் ராசேந்திரனும் இட்டேரி வழியாக சைக்கிளில் எதிர்"காத்தில்" பெடல்கள் மீது ஏறி..அழுத்தி ... ஓட்டுவோம். எதிர் காற்றில் சைக்கிள் ஓட்டுவது என்பது பிரேக் பிடித்துக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதற்கு சமம். சோழக்கூட்டோடு எருமைத்தயிரு கலந்து ஆத்தா அன்போடு ஊத்திக்கொடுத்த சாப்பாடு , சைக்கிளின் ஆட்டத்தால், தூக்குப்போசி வாய்வழியாக.. சிந்த ஆரம்பிக்கும். சில சமயங்களில் பக்கத்து ஊரு வாத்தியார் எதுக்கால சைக்கிள்ல வருவார். உடனே இறங்கி ஒரு வணக்கம் போட்டு ... அப்படியே... தாவிக்குதித்து... மறுபடியும் அழுத்துவோம்.. சைக்கிளை நிப்பாட்டாமலே! பரீட்சை முடிந்து மதியம் பள்ளிக்கு பக்கத்துல இருக்குற வயல்வெளிக்கு நண்பர்களோடு செல்வேன். அவரவர் சாப்பாடுகள் காலியானவுடன் கிணற்றில் ஒரு சிறு குளியல். ஒரு அரைமணிநேரம் தண்ணிக்குள்ள தொட்டுவிளயாடுவோம். சில சூரன்கள் இருப்பனுக... நல்லா மூச்சை தம் கட்டிக்கிட்டு .. ஒரு மூணு ஆள் ஆழத்துல போயி மல்லாக்க பாத்தவாரே படுத்துக்கிட்டு "முடிஞ்சா தொடுன்னு" ச