Skip to main content

திராவிட நிசம்

ஒரு அய்யரையும், அய்யங்காரையும் ரிசர்வேசன் விசயத்தில் கூட நான் எதிர்க்கவில்லை சாதி சொல்லி.. இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் அவர்கள் சனத்தொகை விகிதாசாரப்படி இட ஒதுக்கீடு நல்கவேண்டும் என்பது என் கொள்கை நிலைபாடு!
மற்றபடி தமிழ் என்பது வெறும் மொழியல்ல.. அது ஒரு உணர்வானால் ஆரியன் என்று அவர்களை, அதுவும் ஓரளவுக்கு படித்த சமூக மாற்றத்தை சிந்திக்கும் இக்காலத் தலைமுறையினரை ஒதுக்கிவைப்பது என்பது வரலாற்றுத் தவறாகவே முடியும்! ( 69% சதவிகித இட ஒதுக்கீடு, காஞ்சி சங்கரரை கைது செய்தது என்று சாதித்தவர் ஜெயலலிதா என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது!)

நமக்கே 5 தலைமுறைக்கு முன் பிறந்த முப்பாட்டன் பேர் ஞாபகம் இல்லாதபோது இக்கால தாய்ப்பாலோடு தமிழ்பால் குடித்து வளர்ந்த (அவர்கள் வீடுகளில் சமஸ்கிருதத்திலா தாலாட்டுகிறார்கள்!) கணினி, / இணையத் தலைமுறையை 2000 ஆண்டு வரலாறு சொல்லி அவர்களின் ஆரிய பரம்பரையையே காரணம் காட்டி இவர்களையும் தண்டிப்பது எந்த வகையிலும் ஞாயமாகவோ, நேர்மையாகவோ, பகுத்தறிவாகவோ, சுயமரியாதையாகவோ எனக்குத் தெரியவில்லை. குழந்தை திருமணம் செய்த அவர்களே இனறு பரவலாக காதல் திருமணங்களை ஏற்றுக்கொள்ளும், பெரியார் சிந்தனைகளை, மார்க்சியச் சிந்தனைகளை, தலித்தியச் சிந்த்னைகளை ஏற்றுக்கொள்ளும் அளவு வளர்ந்திருக்கும் பொழுது திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் இன்னும் இரட்டை டம்ளர்களில் இருந்து கூட மாறவில்லை என்பது திராவிட நிசம்!

Comments

Popular posts from this blog

‎வாரியர் டயட் , தண்ணீர்_டயட்‬ ‪- ‎என்_அனுபவம்‬ :

எனது வாரியர் டயட் நூல் பற்றி எழுதுவதற்கான ஆய்வுகளின் போது இந்த தண்ணீர் டயட் பற்றி பலமுறை படிக்க நேர்ந்தது. எனது பக்கத்து கடை சேட்டு (ஜைனர்) வேறு இதை பற்றீ சொல்லியிருந்தார் சென்ற மாதம். சரி பார்த்துவிடுவோம் என்று சனி இரவு உணவருந்திவிட்டு . . . அதன் பின்னர் அடுத்த உணவை ஞாயிறு இரவு அருத்தலாம் என்று ஆரம்பித்தேன். காலை 9 மணிக்கு அனைவரும் உணவருந்த சென்ற போது நான் மாலை சூரியன் மறைந்த பின்னரே சாப்பிட இருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன் ! மதியம் வெஜ் பிரியாணி.. சாப்பிட அழைத்தனர். இல்லை இரவு சாப்பிட்டு கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். தலை சுற்றல் ஆரம்பித்திருந்தது. மனம் குவிய மறுத்தது. தாகம் எடுத்த போதெல்லாம்.. வயிறு கிள்ளிய போதெல்லாம்... சுத்தமான தண்ணீர் மட்டுமே ! அமைதியாக அறையை சுத்தம் செய்வது என்று சிறு சிறு வேலைகளில் மனதை செலுத்தினேன். மாலை 6.30 மணிக்கு சூரியன் மறைந்தபோது... தலைசுற்றல் மயக்கம் எல்லாம் நின்று போயிருந்தது. ஒரு குளிர்ந்தநீர் குளியல்.. பின்பு சென்று காலை எனக்காக வைத்திருந்த வெண்பொங்க்ல், மதிய வெஜிடபிள் பிரியாணி இரண்டையும் சேர்த்து பசியடங்க சாப்பிட்டேன். அது எவ்வளவு …

முகநூல் & வலைப்பதிவுகள்

இனிமேல் பல ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்பு மறுபடியும் உறுதியாக வலைப்பதிவுலகில் மறுசென்மம் எடுத்துள்ளேன். ஆயிரக்கணக்கான பதிவுகளை முகநூலில் எழுதினாலும் வகை பிரிக்கவும் வழியில்லாத காலத்தால் அடித்துசெல்லும் நீரின்மீது எழுதிய எழுத்துக்களாக முகநூல் எழுத்துக்களை உணர்வதால் அதனோடு டிஜிட்டல் கல்வெட்டுகளாய் இனிவரும் காலங்களிலும் விளங்க இருக்கும் வலைப்பதிவுகளுக்கு மீண்டும் நுழைகிறேன். எனது வலைப்பூ minimalist chella dot blogspot dot in என்கிற தளத்தில் மினிமலிசம் ஸ்டைலில் வடிவமைக்கப்ப்ட்டுள்ளது. அனைவரையும் வரவேற்கிறேன்.

சுக்கு காபி, காப்பித்தண்ணி, போஸ்ட் மாடர்னிசம்

ஒரு ஊருல ஒரு தனிக்கட்டை இருந்தானாம். அவன் தானே தனக்குத் தெரிஞ்சமுறையில சுல்லி, பன்னாடை, விறகெல்லாம் வச்சு, மூணுகல் அடுப்புக்கூட்டி, சுக்குத்தண்ணி வச்சு அவங்க ஊரில நிறைய விளையும் தென்னையிலிருந்து கிடைக்கும் முக்கண்ணு கொட்டாங்குச்சியில ஊத்தி... சாலி'யா அவங்கூரு பாட்டை பாடிக்கிட்டே குடிப்பானாம்.

அவன் பக்கத்து வீட்டுக்காரனுக்கு இது புடிக்காதாம். பாக்குறவன்கிட்டயெல்லாம் இவனுக்கு எப்படி பில்டர்ல் டிகாக்சன் போட்டு காப்பி வைச்சு சாசர் ஊத்தி சிப் பன்னிக்குடிக்கனூம்னே தெரியலைன்னு கிண்டல் பன்னுவானாம். இதுனால தனிக்கட்டை கேலிகிண்டலுக்கு அப்பப்ப உட்படுத்தப்படறதும் உண்டாம். அவன் "எனக்கு எது இயல்பா தெரியுமோ அப்படித்தான் சுக்குக்காப்பி வச்சு சந்தோசமா கொட்டாங்குச்சில குடிக்கறேன்.. இவனுக்கு என்ன வந்துச்சி"ன்னு அலட்சியப்படுத்திக்கிட்டே வழமைபோல் இருந்தானாம்.

அப்பத்தான் ஒரு வெளியூர்க்காரன் ஊருக்கு டிராமா போடவந்தானாம். அவன்கிட்ட பக்கத்துவீட்டுகாரன் தனிக்கட்டைக்கு காப்பி ஒழுங்கா முறைப்படி போடத்தெரியலைன்னு புலம்புனானாம். அதுக்கு அந்த வெளியூர்க்காரன்... "அதெல்லாம் தப்பு. இப்ப…