Skip to main content

Posts

Showing posts from February, 2016

சூனா சாமியும் ஜே.என்.யூ வும் . . .

ஜே.என்.யூ மீது யார் கைவைத்தாலும் இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் உங்கள் மடத்தனம் வெளிப்படுத்தப்படும். அப்படியென்ன பெருமை அந்த பல்கலை கழகத்துக்கு? அவர்களின் இந்த நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் அலசுபவர்கள்.. இளைஞர்கள்... மூடர் கூடம் அல்ல . . . சிந்தனைகளின் சிகரங்கள் வாழ்ந்த வாழும் இடம்.  கன்ஹைய குமாரை கைது செய்த உடன் நடந்த போராட்டங்களுக்கு தலைமை வகித்து ஜான்சி ராணி போன்று போராடும் வீரப்பெண் என்று பலராலும் அழைக்கப்படும் செஹ்லா ரஷீத் என்னும் பெண்மணி/மாணவியின் பேச்சை மொழி புரியாவிட்டாலும் கேட்டுப்பாருங்கள் புரியும். அவரை ஒரு முறை ஆர்னாப் கேள்விகேட்டபோது சொன்னார்... நாங்கள் இடது சாரிகள் என்று விமர்சிக்கும் அத்தனை பேருக்கும் ஒரு கேள்வி... நாங்களேதான்.. டாட்டா நானோவுக்கு கம்யூனிஸ்ட் அரசாங்கம் நந்திகிராமத்தை தாரை வார்த்தபோது போராட்டத்தை துவக்கியவர்கள். சுதந்திர சிந்தனை பற்றீ யாரும் எங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு நாங்கள் பண்பட்டவர்கள். ராம் தேவுக்கு எதிராக போராடினோம்... ஆனால் அவருக்கே கடிதம் எழுதினோம்... ஏன் அந்த கூட்ட்டத்தில் அவர் கலந்துகொள்ளக்கூடாது எ

‎வாரியர் டயட் , தண்ணீர்_டயட்‬ ‪- ‎என்_அனுபவம்‬ :

எனது வாரியர் டயட் நூல் பற்றி எழுதுவதற்கான ஆய்வுகளின் போது இந்த தண்ணீர் டயட் பற்றி பலமுறை படிக்க நேர்ந்தது. எனது பக்கத்து கடை சேட்டு (ஜைனர்) வேறு இதை பற்றீ சொல்லியிருந்தார் சென்ற மாதம். சரி பார்த்துவிடுவோம் என்று சனி இரவு உணவருந்திவிட்டு . . . அதன் பின்னர் அடுத்த உணவை ஞாயிறு இரவு அருத்தலாம் என்று ஆரம்பித்தேன். காலை 9 மணிக்கு அனைவரும் உணவருந்த சென்ற போது நான் மாலை சூரியன் மறைந்த பின்னரே சாப்பிட இருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன் ! மதியம் வெஜ் பிரியாணி.. சாப்பிட அழைத்தனர். இல்லை இரவு சாப்பிட்டு கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். தலை சுற்றல் ஆரம்பித்திருந்தது. மனம் குவிய மறுத்தது. தாகம் எடுத்த போதெல்லாம்.. வயிறு கிள்ளிய போதெல்லாம்... சுத்தமான தண்ணீர் மட்டுமே ! அமைதியாக அறையை சுத்தம் செய்வது என்று சிறு சிறு வேலைகளில் மனதை செலுத்தினேன். மாலை 6.30 மணிக்கு சூரியன் மறைந்தபோது... தலைசுற்றல் மயக்கம் எல்லாம் நின்று போயிருந்தது. ஒரு குளிர்ந்தநீர் குளியல்.. பின்பு சென்று காலை எனக்காக வைத்திருந்த வெண்பொங்க்ல், மதிய வெஜிடபிள் பிரியாணி இரண்டையும் சேர்த்து பசியடங்க சாப்பிட்டேன். அது எவ்வளவு

விசாரணை , தங்கப்பதக்கம் , வாலடர் வெற்றிவேல் !

ஸ்காட்லாந்து யார்டு போலிஸ்க்கு அப்புறம் நாங்கதான் என்று பெருமை பட்டுக்கொண்ட அனைத்து தமிழக காவல்துறை அதிகாரிகளும் குடும்பத்தோடு அவசியம் பார்க்கவேண்டிய படம் எங்கூரு ஆட்டோ சந்திரன் அண்ணன் எழுதி வெற்றிமாறன் தயாரித்திருக்கும் குரலற்றவர்களின் காவியம் “விசாரணை “ . இன்று நண்பர்கள் சென்றபோது கதாசியரையரையும் தியேட்டரில் சந்தித்திருக்கிறார்கள் ! கோவை எத்தனையோ புரட்சிகளுக்கு சொந்தமான ஊர். அதில் இந்த படமும் ஒன்று ! தங்கப்பதக்கம், வால்டர் வெற்றிவேல் என்று ஹீரோயிசத்தையும் பொய்முகங்களையும் க ாசாக்கிப்பார்த்த திரைத்துறை சாதாரண மக்களில் கண்ணீர்கதையை, கானகக் குரலை முதன்முறையாக ஆணித்தரமாக காட்சிப்படுத்தி இருக்கிறது இப்படம் மூலம் ! நன்றி வெற்றிமாறன் & எங்கூரு சந்திரன் அண்ணன். உங்களிருவருக்கும் ஆயிரம் அவார்டுகள் மானசீகமாக கிடைக்கும் இப்படத்தின் மூலம். தனுஷ்.. நன்றி உங்களுக்கும் தான் ! பின்குறிப்பு: பல்வேறு நாடுகளிலும் சென்று படித்த நண்பர் சரவணன் அவர்கள் சொல்லுவார் . . . “செல்லா உலகிலேயே அரசாங்கங்களை விட பெரிய டெரரிஸ்ட்கள் இன்னும் இவ்வுலகில் உருவாகவில்லை என்று”.. அது எவ்வளவு நிசம் என்