Skip to main content

‎வாரியர் டயட் , தண்ணீர்_டயட்‬ ‪- ‎என்_அனுபவம்‬ :

எனது வாரியர் டயட் நூல் பற்றி எழுதுவதற்கான ஆய்வுகளின் போது இந்த தண்ணீர் டயட் பற்றி பலமுறை படிக்க நேர்ந்தது. எனது பக்கத்து கடை சேட்டு (ஜைனர்) வேறு இதை பற்றீ சொல்லியிருந்தார் சென்ற மாதம். சரி பார்த்துவிடுவோம் என்று சனி இரவு உணவருந்திவிட்டு . . . அதன் பின்னர் அடுத்த உணவை ஞாயிறு இரவு அருத்தலாம் என்று ஆரம்பித்தேன். காலை 9 மணிக்கு அனைவரும் உணவருந்த சென்ற போது நான் மாலை சூரியன் மறைந்த பின்னரே சாப்பிட இருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன் ! மதியம் வெஜ் பிரியாணி.. சாப்பிட அழைத்தனர். இல்லை இரவு சாப்பிட்டு கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். தலை சுற்றல் ஆரம்பித்திருந்தது. மனம் குவிய மறுத்தது. தாகம் எடுத்த போதெல்லாம்.. வயிறு கிள்ளிய போதெல்லாம்... சுத்தமான தண்ணீர் மட்டுமே ! அமைதியாக அறையை சுத்தம் செய்வது என்று சிறு சிறு வேலைகளில் மனதை செலுத்தினேன். மாலை 6.30 மணிக்கு சூரியன் மறைந்தபோது... தலைசுற்றல் மயக்கம் எல்லாம் நின்று போயிருந்தது. ஒரு குளிர்ந்தநீர் குளியல்.. பின்பு சென்று காலை எனக்காக வைத்திருந்த வெண்பொங்க்ல், மதிய வெஜிடபிள் பிரியாணி இரண்டையும் சேர்த்து பசியடங்க சாப்பிட்டேன். அது எவ்வளவு தவறு என்றூ பிறகு சொல்கிறேன். சாப்பிட்ட ஒரு மணீநேரத்தில் ஒரு போதை மாதிரி அசத்தியது ! மதியம் வயிறு நிறைய சாப்பிட்டால் வரும் உண்ட மயக்கம் .. இந்த வாரியார் தொண்டருக்கு என்று நினைத்துக்கொண்டேன். இரவு 10 மணிக்கு உறங்க சென்றேன். 11 மணிக்கு வயிற்றை கலக்க ஆரம்பித்தது. டாய்லெட் சென்று வந்தேன். மறுபடியும் 1 மணிக்கு.. அப்புறம் 2 மணிக்கு . . . வயிறு சுத்தமாகியிருக்கவேண்டும். ஆனால் மிகவும் அசதியாக இருந்தது. காலையில் மறுபடியும் ஒரு முறை... இப்படி வயிறு அமீபிக் டிஸ்செண்ட்ரி மாதிரி காலியாகியிருந்தது. அது பற்றி இணையத்தில் சென்று கொஞ்சம் தேடினேன். அப்புறம் தான் தவறு எங்கே என்று புரிந்தது. அதாவது நோன்பு இருப்பது எவ்வளவு கடினமோ அதே அளவு கடினம் நோன்பை துறப்பதுவும். கவனமாக சாப்பிட ஆரம்பிக்கவேண்டும். அதனாலேயே இசுலாமியர்கள் ரமலான் நோன்பை கஞ்சி குடித்து முடிக்கிறார்கள். எண்ணெய் அற்ற... எளிதில் சீரணமாகக்கூடிய... உணவை அருத்தி நோன்பை முடிக்காவிட்டால் என்னை போல இரவு உறங்காமல் அடிக்கடி வெளியே சென்றுவர நேரிடலாம் என்ற உண்மை விளங்கியது ! கஞ்சியின் மகத்துவமும் புரிந்தது. எனவே இனிமேல் நோன்பு இருக்க ஆரம்பிப்பவர்கள் அவசியம் அரிசி, கேப்பை, கோதுமை , பார்லி போன்ற கஞ்சியை குடித்து பின்பு ஒரு சில மணித்துளிகள் கழித்து சாப்பிடுவது நன்மை பயக்கும் ! வாழ்க நலமுடன் !

Comments

Popular posts from this blog

விசாரணை , தங்கப்பதக்கம் , வாலடர் வெற்றிவேல் !

ஸ்காட்லாந்து யார்டு போலிஸ்க்கு அப்புறம் நாங்கதான் என்று பெருமை பட்டுக்கொண்ட அனைத்து தமிழக காவல்துறை அதிகாரிகளும் குடும்பத்தோடு அவசியம் பார்க்கவேண்டிய படம் எங்கூரு ஆட்டோ சந்திரன் அண்ணன் எழுதி வெற்றிமாறன் தயாரித்திருக்கும் குரலற்றவர்களின் காவியம் “விசாரணை “ . இன்று நண்பர்கள் சென்றபோது கதாசியரையரையும் தியேட்டரில் சந்தித்திருக்கிறார்கள் ! கோவை எத்தனையோ புரட்சிகளுக்கு சொந்தமான ஊர். அதில் இந்த படமும் ஒன்று ! தங்கப்பதக்கம், வால்டர் வெற்றிவேல் என்று ஹீரோயிசத்தையும் பொய்முகங்களையும் காசாக்கிப்பார்த்த திரைத்துறை சாதாரண மக்களில் கண்ணீர்கதையை, கானகக் குரலை முதன்முறையாக ஆணித்தரமாக காட்சிப்படுத்தி இருக்கிறது இப்படம் மூலம் ! நன்றி வெற்றிமாறன் & எங்கூரு சந்திரன் அண்ணன். உங்களிருவருக்கும் ஆயிரம் அவார்டுகள் மானசீகமாக கிடைக்கும் இப்படத்தின் மூலம்.
தனுஷ்.. நன்றி உங்களுக்கும் தான் !
பின்குறிப்பு: பல்வேறு நாடுகளிலும் சென்று படித்த நண்பர் சரவணன் அவர்கள் சொல்லுவார் . . . “செல்லா உலகிலேயே அரசாங்கங்களை விட பெரிய டெரரிஸ்ட்கள் இன்னும் இவ்வுலகில் உருவாகவில்லை என்று”.. அது எவ்வளவு நிசம் என்பதற்க…

சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள்

#‎மாற்றுச்சிந்தனை‬ : ஒரு போட்டி என்றால் அதில் நேர்மை இருக்கவேண்டும். சைக்கிள் ரேஸ்ல டிவிஎஸ் 50 யையும் ஸ்கூட்டரையும் ஓடவச்சுட்டு .. அதையும் அவர்கள் குறுக்குவழியில் ஓட்ட ... கேப்டனையும், வைகோவையும் மருத்துவர் அன்புமணியையும், திருமாவளவனாரையும் , பாஜகவினரையும், தம்பி சீமானையும் ரிசல்ட் பார்த்துவிட்டு கலாய்ப்பது அறிவீனம் மட்டுமல்ல சிந்தனை சீர்கேடும் ஆகும். உங்க பையன் பிட் அடிச்சு பாசானதுக்காக பக்கத்து வீட்டுப்பையன் நேர்மையா பரிட்சை எழுதி பெயிலானதை கிண்டல் செய்வது என்ன நியாயம். காசுகொடுக்காமல் தேர்தலை சந்தித்த ஒவ்வொரு தோல்வியாளர்களும் வெற்றியாளர்களே. நேர்மையாளர்களே. அவர்களின் தோல்வியை கிண்டல் செய்யும் அனைவரும் மக்களாட்சியின் அடிப்படை அறியா ஈனப்பிறவிகளே. நேர்மையற்ற வெற்றிகளை கொண்டாடி நேர்மையான தோல்விகளை கிண்டலடிக்கும் மனோபாவம் இருக்கும் வரை தமிழனை வீழ்த்த ராஜபக்‌ஷேக்கள் வேறு தனியாக தேவையில்லை. கருணாக்களே கூட போதும் ! தோல்வியடைந்த இவர்களுக்கெல்லாம் ஓட்டளித்த சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள் அனைவருமே வருங்கால நேர்மையான தமிழகத்தின் சிற்பிகள். கழிசடைகளல்ல அவர்கள். அவர்கள் அனைவருக்…