Skip to main content

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி

சின்னைய்யாவுக்கு வணக்கம் . . . அந்த முழுப்பக்க விளம்பரங்கள், மேடை அமைப்புகள், லைட்டிங்... டிஜிட்டல் குறும்படங்கள் எல்லாமே கேப்டனை சி கிளாஸ் ரேஞ்சுக்கும் உங்களை ஏ க்ளாஸ் ரேஞ்சுக்கும் காண்பித்தன என்றால் மிகையில்லை. (ஸ்டாலின் அவர்களின் மெகா புரோகிராம் தான் எப்படி சவால் விடும் என்று பார்க்கனும்) .அதுவும் அந்த அரங்கில் பாதியை பலருக்கும் சீட் போட்டு மீதம் உள்ள பிரமாண்டமான பாதியில் சுரே மைக் போட்டு ஒரு மேற்கத்திய கிருத்துவ பிரச்சாரகர் மாதிரி ஒரு ஸ்டைலில் கையை விரித்து குவித்து நடந்துகொண்டே ... தெளிவாக “ உங்கள் சின்னையாவாகிய நான்”... சாரி... உங்க மக்கள் பேச்சை கேட்டு கேட்டு அப்படி தோணிச்சு... “அன்பு மணியாகிய நான்” என்று முழுப் பொறுப்பேற்று கார்ப்பரேட் லீடர்ஷிப் ஸ்டைலில் ஆரம்பித்ததும் அட்டகாசம் தான் ! தமிழகத்தின் முதல் கையெழுத்தையும் போட்டுவிட்டீர்கள். சரக்கும் முடிந்தது. அல்ரெடி 2 லட்சம் கோடி பற்றாக்குறையை அம்மையார் உங்களுக்கு விட்டுச்செல்லவேண்டிய சூழல் !! அதற்கும் வட்டி வேறு இருக்கு என்று சொன்னீர்கள்.. அதற்கப்புறம் இலவச கல்வி முதல் பல்வேறு அருமையான நலத்திட்டங்களை உண்மையிலேயே சொன்னீர்கள் . . . 60 நாடுகளை சுற்றி வந்தவராச்சே ! .. அதையும் ரசித்தேன். எல்லாச்செலவுக்கும் கடனுக்கும் வருமான இழப்புக்கும் சேர்த்து எப்படி நீங்க 3-4 லச்சம் கோடிக்கு மாற்று கொடுப்பீர்கள் என்பதுதான் எனக்கும் என் நண்பர்களுக்கும் புரியலை. எங்கள மாதிரி பொதுஜனங்கங்களுக்கு எப்படிங்க புரியும். நீங்க மேடையில் சொன்னமாதிரியே டெல்லியில் 40 ஐஏஎஸ்களை வேலைவாங்குன உங்களுக்கு 3 லச்சம் கோடியெல்லாம் ஒரு மேட்டருங்களாய்யா.. எப்படியும் செய்வேங்க என்று சந்தேகத்தை லூஸ்ல விட்டுட்டு சீரியசாத்தேன் பாத்தோம். போலிசுக்கு தெரியாம சாரயம் விக்கமுடியுமான்னு ஒரு நச் கேள்வி கேட்டீங்க பாரு .. அதுவும் செமையா இருந்துச்சி.. அந்த புடிச்சுகுடுத்தா 10000 ஸ்கீம் .. நம்மூரு போலீசை நம்பி அறிவிச்சிறுக்கிறீங்க... உங்க குலதெய்வம்தான் அப்படி கூப்பிட்டவங்களையும் உங்களையும் ஆசீர்வதிக்கனும்.... இருந்தாலும் சூப்பர் யோசனைதான்.
அடுத்து அந்த ஊழல் மேட்டர். சுத்தமா ஒழிப்பேன்.. லோக் ஆயுக்தா என்றெல்லாம் கலக்கினீங்க. என்னால நம்பவே முடியாத விசயம் ... அது ஒண்ணுதானுங்கையா . . . அதாவது ஊழலை ஒழிக்கனும்னா லோக் ஆயுக்தா எல்லாம் இங்கே ஒன்றையும் சாதித்துவிடாது... அதுக்கு காரணம் வேற ஒண்ணும் இல்லைங்க... நம்மூரு ஜட்ஜ் ஐயாக்களின் கால்குலேட்டர்கள் சரியாக கணக்கு போடுவதில்லை.. அம்புட்டுதேங்... wink emoticon. சரி மேட்டருக்கு வருகிறேன்... ஊழலை ஒழிக்க ஆளும் ஆளவிரும்பும் கட்சிகள் தங்களின் வரவு செலவை ட்ரான்ஸ்பரண்டாக காம்பிக்கனும் என்பதுவும் டெல்லிக்குபின்னான லேட்டஸ்ட் ட்ரெண்டு. இப்போகூட இந்த பலகோடி விளம்பரம் மற்றும் மாநாட்டு செலவுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்றும் இணையத்தில் பப்ளிக்கா வெளியிட்டேங்கன்னா எல்லாக்கட்சிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இன்னும் பெரிய அளவில் பேசப்படுவீர்கள். அதைவிட பெரிய ஐயா இரவு பத்துமணிக்கு மேலயும் (டாஸ்மாக் மூடிடுவாங்கன்னுதேன் வேறு ஒரு கட்சி கிங்கா.. கிங்பிஷரா.. சாரி கிங் மேக்கரான்னு கேட்டு திடீர்னு டிக்கு டிக்குன்னு பாட்டு போட்டு 9.30க்கே முடிச்சிட்டாங்கன்னு நண்பர்கள் பேசிக்கிட்டாங்க ! ) கூட்டத்தை உக்காரவச்சு மக்களை ஒழுங்கா நிதானமா வீடு போக படு நேக்காக வித்திட்டதற்கும் ஒரு வாழ்த்து !! பல சமூகநீதி நெருடல்கள் இருந்தாலும் ஒரு க்ளாஸ் எலெக்சன் கேம்பைனை ஸ்டைலிஷாக ஆரம்பித்துள்ள முதல்வர் வேட்பாளரான உங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் விரைவில் வந்து சேர எனது வாழ்த்துக்கள் ! சியர்ஸ் அண்டு ஆல் த பெஸ்ட்.

Comments

Popular posts from this blog

‎வாரியர் டயட் , தண்ணீர்_டயட்‬ ‪- ‎என்_அனுபவம்‬ :

எனது வாரியர் டயட் நூல் பற்றி எழுதுவதற்கான ஆய்வுகளின் போது இந்த தண்ணீர் டயட் பற்றி பலமுறை படிக்க நேர்ந்தது. எனது பக்கத்து கடை சேட்டு (ஜைனர்) வேறு இதை பற்றீ சொல்லியிருந்தார் சென்ற மாதம். சரி பார்த்துவிடுவோம் என்று சனி இரவு உணவருந்திவிட்டு . . . அதன் பின்னர் அடுத்த உணவை ஞாயிறு இரவு அருத்தலாம் என்று ஆரம்பித்தேன். காலை 9 மணிக்கு அனைவரும் உணவருந்த சென்ற போது நான் மாலை சூரியன் மறைந்த பின்னரே சாப்பிட இருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன் ! மதியம் வெஜ் பிரியாணி.. சாப்பிட அழைத்தனர். இல்லை இரவு சாப்பிட்டு கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். தலை சுற்றல் ஆரம்பித்திருந்தது. மனம் குவிய மறுத்தது. தாகம் எடுத்த போதெல்லாம்.. வயிறு கிள்ளிய போதெல்லாம்... சுத்தமான தண்ணீர் மட்டுமே ! அமைதியாக அறையை சுத்தம் செய்வது என்று சிறு சிறு வேலைகளில் மனதை செலுத்தினேன். மாலை 6.30 மணிக்கு சூரியன் மறைந்தபோது... தலைசுற்றல் மயக்கம் எல்லாம் நின்று போயிருந்தது. ஒரு குளிர்ந்தநீர் குளியல்.. பின்பு சென்று காலை எனக்காக வைத்திருந்த வெண்பொங்க்ல், மதிய வெஜிடபிள் பிரியாணி இரண்டையும் சேர்த்து பசியடங்க சாப்பிட்டேன். அது எவ்வளவு …

முகநூல் & வலைப்பதிவுகள்

இனிமேல் பல ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்பு மறுபடியும் உறுதியாக வலைப்பதிவுலகில் மறுசென்மம் எடுத்துள்ளேன். ஆயிரக்கணக்கான பதிவுகளை முகநூலில் எழுதினாலும் வகை பிரிக்கவும் வழியில்லாத காலத்தால் அடித்துசெல்லும் நீரின்மீது எழுதிய எழுத்துக்களாக முகநூல் எழுத்துக்களை உணர்வதால் அதனோடு டிஜிட்டல் கல்வெட்டுகளாய் இனிவரும் காலங்களிலும் விளங்க இருக்கும் வலைப்பதிவுகளுக்கு மீண்டும் நுழைகிறேன். எனது வலைப்பூ minimalist chella dot blogspot dot in என்கிற தளத்தில் மினிமலிசம் ஸ்டைலில் வடிவமைக்கப்ப்ட்டுள்ளது. அனைவரையும் வரவேற்கிறேன்.

விசாரணை , தங்கப்பதக்கம் , வாலடர் வெற்றிவேல் !

ஸ்காட்லாந்து யார்டு போலிஸ்க்கு அப்புறம் நாங்கதான் என்று பெருமை பட்டுக்கொண்ட அனைத்து தமிழக காவல்துறை அதிகாரிகளும் குடும்பத்தோடு அவசியம் பார்க்கவேண்டிய படம் எங்கூரு ஆட்டோ சந்திரன் அண்ணன் எழுதி வெற்றிமாறன் தயாரித்திருக்கும் குரலற்றவர்களின் காவியம் “விசாரணை “ . இன்று நண்பர்கள் சென்றபோது கதாசியரையரையும் தியேட்டரில் சந்தித்திருக்கிறார்கள் ! கோவை எத்தனையோ புரட்சிகளுக்கு சொந்தமான ஊர். அதில் இந்த படமும் ஒன்று ! தங்கப்பதக்கம், வால்டர் வெற்றிவேல் என்று ஹீரோயிசத்தையும் பொய்முகங்களையும் காசாக்கிப்பார்த்த திரைத்துறை சாதாரண மக்களில் கண்ணீர்கதையை, கானகக் குரலை முதன்முறையாக ஆணித்தரமாக காட்சிப்படுத்தி இருக்கிறது இப்படம் மூலம் ! நன்றி வெற்றிமாறன் & எங்கூரு சந்திரன் அண்ணன். உங்களிருவருக்கும் ஆயிரம் அவார்டுகள் மானசீகமாக கிடைக்கும் இப்படத்தின் மூலம்.
தனுஷ்.. நன்றி உங்களுக்கும் தான் !
பின்குறிப்பு: பல்வேறு நாடுகளிலும் சென்று படித்த நண்பர் சரவணன் அவர்கள் சொல்லுவார் . . . “செல்லா உலகிலேயே அரசாங்கங்களை விட பெரிய டெரரிஸ்ட்கள் இன்னும் இவ்வுலகில் உருவாகவில்லை என்று”.. அது எவ்வளவு நிசம் என்பதற்க…