Skip to main content

Posts

Showing posts from April, 2016

‪#‎ஹாலிவுட் , கோலிவுட், புரூஸ்லி & தமிழக அரசியல்‬

என்னை சிறுவயதில் மிகவும் கவர்ந்த கதாநாயகன் என்றால் வேறுயாருமே இல்லை . . . அது புரூஸ்லி மட்டும்தான். அவரது ரிட்டர்ன் ஆப் தி டிராகன் படத்தை எத்தனை முறை இதுவரை பார்த்திருக்கிறேன் என்று கணக்கு கூட சொல்லமுடியவில்லை. தியேட்டரில் சென்று மட்டுமே ஒரு 20 முறை இருக்கலாம். அந்த காலத்தில் கிராமத்து சிறுவர்களான எங்களுக்கு அவர் படங்கள் தான் (அசை படங்கள் அல்ல) முதல் அறிமுகம்/ ஆதர்சம் எல்லாமே. அவரை திரையில் பார்த்து அதிசயித்தது 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு அப்புறம்தான். சைக்கிள் சீட்கவர்கள் முதல் . . . பனியன்கள் ... போஸ்டர்கள் வரை . . . அவர் தான் அன்று சூப்பர் ஸ்டார். எட்டாம் வகுப்பிலேயே மணி மாஸ்டரிடன் கராத்தே கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டதால்... இந்த புரூஸ்லீ பைத்தியம் உச்சத்தில் இருந்தது எனலாம். இன்றும் ஞாபகம் இருக்கிறது . . . பாயும்புலி படத்திற்கு சென்று .. அதில் ரஜினி ஒரு சின்ன உருளை வடிவ டிரம்மின் மேல் நிற்கும் காட்சி... மேலே அவர் கயிற்றை பிரேமில் தெரியாவண்ணம் பிடித்துக்கொண்டு பேலன்ஸ் செய்யும் வீரதீரக்காட்சியை ( wink emoticon ) அரங்கமே அதிசயத்தில் பார்த்துக்கொண்டிருக்க நானும் எமது புரூ