Saturday, April 9, 2016

‪#‎ஹாலிவுட் , கோலிவுட், புரூஸ்லி & தமிழக அரசியல்‬

என்னை சிறுவயதில் மிகவும் கவர்ந்த கதாநாயகன் என்றால் வேறுயாருமே இல்லை . . . அது புரூஸ்லி மட்டும்தான். அவரது ரிட்டர்ன் ஆப் தி டிராகன் படத்தை எத்தனை முறை இதுவரை பார்த்திருக்கிறேன் என்று கணக்கு கூட சொல்லமுடியவில்லை. தியேட்டரில் சென்று மட்டுமே ஒரு 20 முறை இருக்கலாம். அந்த காலத்தில் கிராமத்து சிறுவர்களான எங்களுக்கு அவர் படங்கள் தான் (அசை படங்கள் அல்ல) முதல் அறிமுகம்/ ஆதர்சம் எல்லாமே. அவரை திரையில் பார்த்து அதிசயித்தது 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு அப்புறம்தான். சைக்கிள் சீட்கவர்கள் முதல் . . . பனியன்கள் ... போஸ்டர்கள் வரை . . . அவர் தான் அன்று சூப்பர் ஸ்டார். எட்டாம் வகுப்பிலேயே மணி மாஸ்டரிடன் கராத்தே கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டதால்... இந்த புரூஸ்லீ பைத்தியம் உச்சத்தில் இருந்தது எனலாம். இன்றும் ஞாபகம் இருக்கிறது . . . பாயும்புலி படத்திற்கு சென்று .. அதில் ரஜினி ஒரு சின்ன உருளை வடிவ டிரம்மின் மேல் நிற்கும் காட்சி... மேலே அவர் கயிற்றை பிரேமில் தெரியாவண்ணம் பிடித்துக்கொண்டு பேலன்ஸ் செய்யும் வீரதீரக்காட்சியை ( wink emoticon ) அரங்கமே அதிசயத்தில் பார்த்துக்கொண்டிருக்க நானும் எமது புரூஸ்லீ ரசிகர் மன்ற நண்பர்களும் வயிறுவலிக்க சிறித்துக்கொண்டது wink emoticon . சரி இப்பொழுது மேட்டருக்கு வருகிறேன்.

இதுக்கும் தற்போதைய தமிழக அரசியலுக்கும் என்ன தொடர்பு செல்லா ? என்று கேட்பது புரிகிறது. அப்படியே சீனை இங்கே கட் செய்துவிட்டு மீண்டும் ரிட்டர்ன் ஆப் த டிராகன் படத்துக்கு செல்வோம். அதில் சக்நாரிஸ் உடனான அந்த பூனைக்குட்டி சண்டை தான் படத்தின் உச்சம். சக் நாரிஸ் எங்களது மற்றொரு ஆதர்சம். மார்சியல் ஆர்ட்ஸ் கலையின் நிகரற்ற சாம்பியன்களில் அவரும் ஒருவர். (கடைசியாக அவரது படத்தை செண்ட்ரல் தியேட்டரில் பார்த்தேன்... டெல்ட்டா ஃபோர்ஸ்) . அந்த புகழ்பெற்ற இரு மார்சியல் ஆர்ட் ஹீரோக்களும் அத்ல் மோதிக்கொள்ளவேண்டும். அந்த காட்சியமைப்பு... ஒளிப்பதிவு... ஆர்ப்பாட்டமில்லாத ஓசைகளற்ற மினிமலிஸ்ட் ஒலிச்சேர்ப்பு .. அந்த பூனைக்குட்டி... எல்லாம் அதை இன்றும் ஒரு உலகத்தரம் வாய்ந்த சண்டைக்காட்சிகளில் ஒன்றாக சினிமா ரசிகர்களால் போற்றப்படும் ஒரு க்ளாசிக்கல் ஃபைட் சீனாக நினவில் கொள்ளப்படுகிறது என்றால் அந்த புகழ் அனைத்தும் அதன் டைரக்டருக்கே போய்ச்சேரும் ! யாரந்த் டைரக்டர்.. அவர்தான் புரூஸ்லீ ! அதில் அந்த அற்புத பைட் சீனின் முடிவில் வில்லன் சக்நாரிஸ் சண்டையில் புரூஸ்லீயால் கொல்லப்படுவார். அவர் இறந்துகிடக்கும் காட்சிக்கு அடுத்த சீன் . . . புரூஸ்லி தனது சட்டையை போட்டுக்கொண்டு வெளியே வருவார். பார்த்தால் அங்கு இறந்துகிடக்கும் எதிரி சக்நாரிஸ் உடைய மேல் சட்டையும் அவரது பிளாக் பெல்ட்டும் இருக்கும். ஒரு சில வினாடிகள் யோசிப்பார்... பின்பு நேராக நடந்து சென்று அந்த சட்டையையும் பிளாக்பெல்ட்டையும் எடுத்து வந்து இறந்துகிடக்கும் எதிரியின் உடல்மீது மிகவும் மரியாதையாக போர்த்தி.. பெல்ட்டை வைத்துவிட்டு பிறகு வெளியேறுவார்.

இந்த ஒரு சீன் ஒரு உண்மையான போராளியின் மனவோட்டத்தை குறிக்கிறது எனலாம். அத்தகைய தகுதிவாய்ந்த ஒரு கடும் போராட்டத்துக்கு தமிழக அரசியல் இன்னும் தயாராகவில்லை என்றே தோன்றுகிறது. எங்கும் மரியாதையின்மை... நேர்மையின்மை... நாகரீகமின்மை . . . குழிபறிப்புகள்... கால்வாருதல்கள் . . . இப்படிப்பட்ட ஒரு கேவலமான போராட்டச்சூழல் எனக்கு மீண்டும் பாயும்புலி படத்தின் மகா சாதாரணமான அந்த ரஜினி ஜெய்சங்கர் காட்சியை ஞாபகப்படுத்துகிறது.

இதில் ஹிட்லர் மாதிரியே சல்யூட் அடிப்பதும்... குரலை ஏற்றி இறக்கிப்பேசும் ... இன்னொரு தம்பியின் காமடி சீன் .. சீரியசாக பார்க்கப்படும்போது... தமிழகம் ஒரு முன்னேறிய ஜனநாயக நாடாக.. இஸ்ரேல் போன்ற ஒரு சிறு வல்லரசாக மாறவேண்டுமென்றால் . . . கோலிவுட் ஹாலிவுட்டாக எவ்வளவு காலம் எடுக்குமோ ... அவ்வளவு காலம் ஆகலாம் என்று நினைத்துகொள்வேன் !

No comments:

Post a Comment