Skip to main content

சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள்

#‎மாற்றுச்சிந்தனை‬ : ஒரு போட்டி என்றால் அதில் நேர்மை இருக்கவேண்டும். சைக்கிள் ரேஸ்ல டிவிஎஸ் 50 யையும் ஸ்கூட்டரையும் ஓடவச்சுட்டு .. அதையும் அவர்கள் குறுக்குவழியில் ஓட்ட ... கேப்டனையும், வைகோவையும் மருத்துவர் அன்புமணியையும், திருமாவளவனாரையும் , பாஜகவினரையும், தம்பி சீமானையும் ரிசல்ட் பார்த்துவிட்டு கலாய்ப்பது அறிவீனம் மட்டுமல்ல சிந்தனை சீர்கேடும் ஆகும். உங்க பையன் பிட் அடிச்சு பாசானதுக்காக பக்கத்து வீட்டுப்பையன் நேர்மையா பரிட்சை எழுதி பெயிலானதை கிண்டல் செய்வது என்ன நியாயம். காசுகொடுக்காமல் தேர்தலை சந்தித்த ஒவ்வொரு தோல்வியாளர்களும் வெற்றியாளர்களே. நேர்மையாளர்களே. அவர்களின் தோல்வியை கிண்டல் செய்யும் அனைவரும் மக்களாட்சியின் அடிப்படை அறியா ஈனப்பிறவிகளே. நேர்மையற்ற வெற்றிகளை கொண்டாடி நேர்மையான தோல்விகளை கிண்டலடிக்கும் மனோபாவம் இருக்கும் வரை தமிழனை வீழ்த்த ராஜபக்‌ஷேக்கள் வேறு தனியாக தேவையில்லை. கருணாக்களே கூட போதும் ! தோல்வியடைந்த இவர்களுக்கெல்லாம் ஓட்டளித்த சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள் அனைவருமே வருங்கால நேர்மையான தமிழகத்தின் சிற்பிகள். கழிசடைகளல்ல அவர்கள். அவர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துகொள்கிறேன்.... நானும் உங்களில் ஒருவன் என்ற நேர்மையில் !

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இதற்குமேல் எப்படி புரிய வைக்கலாம்

    ReplyDelete
  3. இதற்குமேல் எப்படி புரிய வைக்கலாம்

    ReplyDelete
  4. மக்களுக்கு சிந்திக்கும் திறனை வளர்க்காமல் ஓட்டு கேட்பதில் அர்த்தம் இல்லை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி

சின்னைய்யாவுக்கு வணக்கம் . . . அந்த முழுப்பக்க விளம்பரங்கள், மேடை அமைப்புகள், லைட்டிங்... டிஜிட்டல் குறும்படங்கள் எல்லாமே கேப்டனை சி கிளாஸ் ரேஞ்சுக்கும் உங்களை ஏ க்ளாஸ் ரேஞ்சுக்கும் காண்பித்தன என்றால் மிகையில்லை. (ஸ்டாலின் அவர்களின் மெகா புரோகிராம் தான் எப்படி சவால் விடும் என்று பார்க்கனும்) .அதுவும் அந்த அரங்கில் பாதியை பலருக்கும் சீட் போட்டு மீதம் உள்ள பிரமாண்டமான பாதியில் சுரே மைக் போட்டு ஒரு மேற்கத்திய கிருத்துவ பிரச்சாரகர் மாதிரி ஒரு ஸ்டைலில் கையை விரித்து குவித்து நடந்துகொண்டே ... தெளிவாக “ உங்கள் சின்னையாவாகிய நான்”... சாரி... உங்க மக்கள் பேச்சை கேட்டு கேட்டு அப்படி தோணிச்சு... “அன்பு மணியாகிய நான்” என்று முழுப் பொறுப்பேற்று கார்ப்பரேட் லீடர்ஷிப் ஸ்டைலில் ஆரம்பித்ததும் அட்டகாசம் தான் ! தமிழகத்தின் முதல் கையெழுத்தையும் போட்டுவிட்டீர்கள். சரக்கும் முடிந்தது. அல்ரெடி 2 லட்சம் கோடி பற்றாக்குறையை அம்மையார் உங்களுக்கு விட்டுச்செல்லவேண்டிய சூழல் !! அதற்கும் வட்டி வேறு இருக்கு என்று சொன்னீர்கள்.. அதற்கப்புறம் இலவச கல்வி முதல் பல்வேறு அருமையான நலத்திட்டங்களை உண்மைய

சூனா சாமியும் ஜே.என்.யூ வும் . . .

ஜே.என்.யூ மீது யார் கைவைத்தாலும் இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் உங்கள் மடத்தனம் வெளிப்படுத்தப்படும். அப்படியென்ன பெருமை அந்த பல்கலை கழகத்துக்கு? அவர்களின் இந்த நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் அலசுபவர்கள்.. இளைஞர்கள்... மூடர் கூடம் அல்ல . . . சிந்தனைகளின் சிகரங்கள் வாழ்ந்த வாழும் இடம்.  கன்ஹைய குமாரை கைது செய்த உடன் நடந்த போராட்டங்களுக்கு தலைமை வகித்து ஜான்சி ராணி போன்று போராடும் வீரப்பெண் என்று பலராலும் அழைக்கப்படும் செஹ்லா ரஷீத் என்னும் பெண்மணி/மாணவியின் பேச்சை மொழி புரியாவிட்டாலும் கேட்டுப்பாருங்கள் புரியும். அவரை ஒரு முறை ஆர்னாப் கேள்விகேட்டபோது சொன்னார்... நாங்கள் இடது சாரிகள் என்று விமர்சிக்கும் அத்தனை பேருக்கும் ஒரு கேள்வி... நாங்களேதான்.. டாட்டா நானோவுக்கு கம்யூனிஸ்ட் அரசாங்கம் நந்திகிராமத்தை தாரை வார்த்தபோது போராட்டத்தை துவக்கியவர்கள். சுதந்திர சிந்தனை பற்றீ யாரும் எங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு நாங்கள் பண்பட்டவர்கள். ராம் தேவுக்கு எதிராக போராடினோம்... ஆனால் அவருக்கே கடிதம் எழுதினோம்... ஏன் அந்த கூட்ட்டத்தில் அவர் கலந்துகொள்ளக்கூடாது எ