Skip to main content

சுக்கு காபி, காப்பித்தண்ணி, போஸ்ட் மாடர்னிசம்

ஒரு ஊருல ஒரு தனிக்கட்டை இருந்தானாம். அவன் தானே தனக்குத் தெரிஞ்சமுறையில சுல்லி, பன்னாடை, விறகெல்லாம் வச்சு, மூணுகல் அடுப்புக்கூட்டி, சுக்குத்தண்ணி வச்சு அவங்க ஊரில நிறைய விளையும் தென்னையிலிருந்து கிடைக்கும் முக்கண்ணு கொட்டாங்குச்சியில ஊத்தி... சாலி'யா அவங்கூரு பாட்டை பாடிக்கிட்டே குடிப்பானாம்.

அவன் பக்கத்து வீட்டுக்காரனுக்கு இது புடிக்காதாம். பாக்குறவன்கிட்டயெல்லாம் இவனுக்கு எப்படி பில்டர்ல் டிகாக்சன் போட்டு காப்பி வைச்சு சாசர் ஊத்தி சிப் பன்னிக்குடிக்கனூம்னே தெரியலைன்னு கிண்டல் பன்னுவானாம். இதுனால தனிக்கட்டை கேலிகிண்டலுக்கு அப்பப்ப உட்படுத்தப்படறதும் உண்டாம். அவன் "எனக்கு எது இயல்பா தெரியுமோ அப்படித்தான் சுக்குக்காப்பி வச்சு சந்தோசமா கொட்டாங்குச்சில குடிக்கறேன்.. இவனுக்கு என்ன வந்துச்சி"ன்னு அலட்சியப்படுத்திக்கிட்டே வழமைபோல் இருந்தானாம்.

அப்பத்தான் ஒரு வெளியூர்க்காரன் ஊருக்கு டிராமா போடவந்தானாம். அவன்கிட்ட பக்கத்துவீட்டுகாரன் தனிக்கட்டைக்கு காப்பி ஒழுங்கா முறைப்படி போடத்தெரியலைன்னு புலம்புனானாம். அதுக்கு அந்த வெளியூர்க்காரன்... "அதெல்லாம் தப்பு. இப்படித்தான் காப்பி போடணும்னு ஒண்ணும் வரைமுறை தேவயில்லை. இந்த மாதிரி கட்டுப்பாடெல்லாம் பட்டிக்காட்டுத் தனம்"னு சொல்லி புரட்சிவசனம் பேசினபடியே நம்ம தனிக்கட்டை வீட்டுக்குப் போயி அவனுக்கு ஆறுதல் சொன்னானாம்.. "நீ பக்கத்துவீட்டுக்காரன் சொல்றான்னு கேக்காத.. நம்ம மரபுன்னு இருக்கறதையில்லாம் உடைக்கனும்... இப்படித்தான் காப்பித்தன்னீ போடம்னும்னு வரைமுறைய யாராவது சொன்னா கண்டுக்காத".

அந்த தனிக்கட்டைக்கு சந்தோசம் தாங்க முடியாம .. ஆகா என்னைப் புறிஞ்சிக்கிட ஆள் நீங்கதான்... உங்க கருத்து அற்புதம்னு சொல்லி, "ஒரு நிமிசம் இருங்க, காப்பிசாப்பிடலாம்"னு... சந்தோசத்துல காட்டுக்கு சுல்லிபொறுக்க ஓடினானாம். அவன் மனசெல்லாம் சந்தோசமா இருந்திச்சாம்.

வேகவேகமா திரும்பிவந்து அடுப்புகூட்டி காப்பித்தண்ணி வச்சு கொட்டாங்குச்சியில ஊத்தி வந்தவனுக்கு குடுத்தானாம். அந்த டிராமாக்காரன் கையில வாங்கும்போது சொன்னானாம்.. "என்ன நீ? .. காப்பி எப்படி வேணாலும் போடலாம்.. ஆனா பரிமாறும்போது வட்டமோ சதுரமோ இல்லாத ட்ரேயில் வைச்சு, நின்னுக்கிட்டும் உக்காந்துக்கிட்டும் இல்லாத மாதிரி பாவனையில, நீயாருன்னே தெரியாத மாதிரி தலையை துண்டால மூடி, முன்னெது பின்னெதுன்னு தெரியாத கப் அண்டு சாசர் 'ல ஊத்தி .. எம்மூஞ்சியப் பாக்காம வானத்தை மட்டும் பாத்துக்கிட்டு பரிமாறனும்"னு சொன்னானாம் ..

இதை சற்றும் எதிர்பாராத தனிக்கட்டை டென்சனாகி... "த்தூத்தேரி... இதுக்கு பக்கத்துவீட்டு பில்டர் காபிக்காரனே பரவாயில்லை... நீ நல்ல சகுணஞ்சொல்லி மாட்டுத்தாளில்ல விழுந்த பல்லி மாதிரியில்ல இருக்க" ன்னு காப்பித்தண்ணிய அவன் மூஞ்சில வீசுனானாம்.

--------------------------------------

இந்தக்கதைக்கும் சாரு தொடங்கி சுகாணாதிவாகர் வரை பின்னவீனத்துவம் பேசும் அனைத்து எழுத்தாளனுகளுக்கும் சத்தியமா தொடர்பு இருக்கு :-)

Related Reading: Postmodernism satire by exBostonian

Related Saying: எனக்கு "முன்"னும் தெரியாது.. "பின்"னும் தெரியாது... "மண்" நல்லா தெரியும் - எழுத்தாளர் பாமரன்


Geraldo, Eat Your Avant-Pop Heart Out

By Mark Leyner

HOBOKEN, N.J. -- JENNY JONES: Boy, we have a show for you today! Recently, the University of Virginia philosopher Richard Rorty made the stunning declaration that nobody has "the foggiest idea" what postmodernism means. "It would be nice to get rid of it," he said. "It isn't exactly an idea; it's a word that pretends to stand for an idea." This shocking admission that there is no such thing as postmodernism has produced a firestorm of protest around the country. Thousands of authors, critics and graduate students who'd considered themselves postmodernists are outraged at the betrayal.
Today we have with us a writer -- a recovering postmodernist -- who believes that his literary career and personal life have been irreparably damaged by the theory, and who feels defrauded by the academics who promulgated it. He wishes to remain anonymous, so we'll call him "Alex."
Alex, as an adolescent, before you began experimenting with postmodernism, you considered yourself -- what? Close shot of ALEX. An electronic blob obscures his face. Words appear at bottom of screen: "Says he was traumatized by postmodernism and blames academics."
மேலும் படிக்க: இங்கே செல்லவும்

Comments

Popular posts from this blog

சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள்

#‎ மாற்றுச்சிந்தனை‬ : ஒரு போட்டி என்றால் அதில் நேர்மை இருக்கவேண்டும். சைக்கிள் ரேஸ்ல டிவிஎஸ் 50 யையும் ஸ்கூட்டரையும் ஓடவச்சுட்டு .. அதையும் அவர்கள் குறுக்குவழியில் ஓட்ட ... கேப்டனையும், வைகோவையும் மருத்துவர் அன்புமணியையும், திருமாவளவனாரையும் , பாஜகவினரையும், தம்பி சீமானையும் ரிசல்ட் பார்த்துவிட்டு கலாய்ப்பது அறிவீனம் மட்டுமல்ல சிந்தனை சீர்கேடும் ஆகும். உங்க பையன் பிட் அடிச்சு பாசானதுக்காக பக்கத்து வீட்டுப்பையன் நேர்மையா பரிட்சை எழுதி பெயிலானதை கிண்டல் செய்வது என்ன நியாயம். க ாசுகொடுக்காமல் தேர்தலை சந்தித்த ஒவ்வொரு தோல்வியாளர்களும் வெற்றியாளர்களே. நேர்மையாளர்களே. அவர்களின் தோல்வியை கிண்டல் செய்யும் அனைவரும் மக்களாட்சியின் அடிப்படை அறியா ஈனப்பிறவிகளே. நேர்மையற்ற வெற்றிகளை கொண்டாடி நேர்மையான தோல்விகளை கிண்டலடிக்கும் மனோபாவம் இருக்கும் வரை தமிழனை வீழ்த்த ராஜபக்‌ஷேக்கள் வேறு தனியாக தேவையில்லை. கருணாக்களே கூட போதும் ! தோல்வியடைந்த இவர்களுக்கெல்லாம் ஓட்டளித்த சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள் அனைவருமே வருங்கால நேர்மையான தமிழகத்தின் சிற்பிகள். கழிசடைகளல்ல அவர்கள். அவர்கள் அனைவர

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி

சின்னைய்யாவுக்கு வணக்கம் . . . அந்த முழுப்பக்க விளம்பரங்கள், மேடை அமைப்புகள், லைட்டிங்... டிஜிட்டல் குறும்படங்கள் எல்லாமே கேப்டனை சி கிளாஸ் ரேஞ்சுக்கும் உங்களை ஏ க்ளாஸ் ரேஞ்சுக்கும் காண்பித்தன என்றால் மிகையில்லை. (ஸ்டாலின் அவர்களின் மெகா புரோகிராம் தான் எப்படி சவால் விடும் என்று பார்க்கனும்) .அதுவும் அந்த அரங்கில் பாதியை பலருக்கும் சீட் போட்டு மீதம் உள்ள பிரமாண்டமான பாதியில் சுரே மைக் போட்டு ஒரு மேற்கத்திய கிருத்துவ பிரச்சாரகர் மாதிரி ஒரு ஸ்டைலில் கையை விரித்து குவித்து நடந்துகொண்டே ... தெளிவாக “ உங்கள் சின்னையாவாகிய நான்”... சாரி... உங்க மக்கள் பேச்சை கேட்டு கேட்டு அப்படி தோணிச்சு... “அன்பு மணியாகிய நான்” என்று முழுப் பொறுப்பேற்று கார்ப்பரேட் லீடர்ஷிப் ஸ்டைலில் ஆரம்பித்ததும் அட்டகாசம் தான் ! தமிழகத்தின் முதல் கையெழுத்தையும் போட்டுவிட்டீர்கள். சரக்கும் முடிந்தது. அல்ரெடி 2 லட்சம் கோடி பற்றாக்குறையை அம்மையார் உங்களுக்கு விட்டுச்செல்லவேண்டிய சூழல் !! அதற்கும் வட்டி வேறு இருக்கு என்று சொன்னீர்கள்.. அதற்கப்புறம் இலவச கல்வி முதல் பல்வேறு அருமையான நலத்திட்டங்களை உண்மைய

சூனா சாமியும் ஜே.என்.யூ வும் . . .

ஜே.என்.யூ மீது யார் கைவைத்தாலும் இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் உங்கள் மடத்தனம் வெளிப்படுத்தப்படும். அப்படியென்ன பெருமை அந்த பல்கலை கழகத்துக்கு? அவர்களின் இந்த நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் அலசுபவர்கள்.. இளைஞர்கள்... மூடர் கூடம் அல்ல . . . சிந்தனைகளின் சிகரங்கள் வாழ்ந்த வாழும் இடம்.  கன்ஹைய குமாரை கைது செய்த உடன் நடந்த போராட்டங்களுக்கு தலைமை வகித்து ஜான்சி ராணி போன்று போராடும் வீரப்பெண் என்று பலராலும் அழைக்கப்படும் செஹ்லா ரஷீத் என்னும் பெண்மணி/மாணவியின் பேச்சை மொழி புரியாவிட்டாலும் கேட்டுப்பாருங்கள் புரியும். அவரை ஒரு முறை ஆர்னாப் கேள்விகேட்டபோது சொன்னார்... நாங்கள் இடது சாரிகள் என்று விமர்சிக்கும் அத்தனை பேருக்கும் ஒரு கேள்வி... நாங்களேதான்.. டாட்டா நானோவுக்கு கம்யூனிஸ்ட் அரசாங்கம் நந்திகிராமத்தை தாரை வார்த்தபோது போராட்டத்தை துவக்கியவர்கள். சுதந்திர சிந்தனை பற்றீ யாரும் எங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு நாங்கள் பண்பட்டவர்கள். ராம் தேவுக்கு எதிராக போராடினோம்... ஆனால் அவருக்கே கடிதம் எழுதினோம்... ஏன் அந்த கூட்ட்டத்தில் அவர் கலந்துகொள்ளக்கூடாது எ