Skip to main content

விபத்தில் வீழ்ந்த விருட்சத்தின் விதை #வெமுலா

எனக்கு ரோஹித் வெமுலாவின் தற்கொலை பற்றி எழுத ஆரம்பித்தபின்பு எனது இந்துத்துவ முகநூல் எழுத்தாளர்கள், மோடி ஆதரவாளர்கள், வலதுசாரிகள் மீதான ஒப்பீனியனே முற்றிலுமாக மாறிவிட்டது என்று சொல்லலாம். சில தினங்களுக்கு முன்பு கொஞ்சம் கோபமாக எங்கள் சீனியர் எழுத்தாளர் திரு பாமரன் பாமரன் தமிழ்நாடு அவர்களுக்கு செல்பேசியில் கூப்பிட்டேன். “என்ன செல்லா, என்ன விசயம்” என்று கேட்டார் . .இல்லை நான் புத்த மதத்துக்கு மாறவேண்டும்.. வழிமுறைகள் சொல்லுங்கள் என்றேன். நிச்சயம் அவரது ஈழ (இலங்கை என்று எழுதினால் இன்றும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார் ) நிலைப்பாடுகள் தெரிந்த அனைவருக்கும் புரியும் இது ஒன்றும் அவருக்கு விருப்பமானதாக இருக்காது என்று. இருந்தாலும் ஒரு உண்மையான பெரியாரிய சிந்தனையாளர் என்பதால் நானும் கேட்டேன்.. அவரும் எதையும் காண்பிக்காமல்.. தோழனே ஒரு ரெண்டுநாள் டைம் கொடுங்க... கேட்டுட்டு சொல்றேன் என்றார். இன்றுவரை கூப்பிடவில்லை வழக்கம்போல ! இப்பொழுது அது மேட்டர் அல்ல.. அந்த அளவுக்கு என்னை தள்ளியது எது என்று யோசிக்கிறேன். அது இந்த இளம் ஆராய்ச்சியாளனின் மரணத்தை ”மத்திய மனித வள மேம்பாட்டு” இராணி முதல் நேற்றுமுளைத்த மோடி பக்தர்கள் வரை கையாண்ட விதம் என்றுதான் சொல்லுவேன். அவ்வளவு அசிங்கமாக இருந்தது அவர்களின் சிந்தனைகள் எழுத்துக்கள். தெரியாத பக்தர்கள் தான் இப்படி என்றால் என் நெருங்கிய பிஜெபி நண்பர்கள் கூட “செல்லா ஒரு இண்டலக்சுவல் என்று காட்டிக்கொள்ளவே” எப்பவும் பெரும்பான்மையை திட்டுகிறார் என்று என்னிடமே சொன்னதும் நடந்தது. ஒரு மிகவும் அறிவுக்கூர்மையான ஒரு இளைஞன் அதுவும் ஒரு இளம் ஆய்வறிஞன் இந்தியாவின் ஆட்சியில் உச்சத்தில் இருக்கும் சக்திகளால் பணத்தால் வயிற்றலடிக்கப்பட்டு கடைசியில் ரோட்டில் உறங்கி தூக்கில் தொங்கி இறந்திருக்கிறான். இது எவ்வளவு பெரிய கொடூரம் என்ற சிந்தனை சிறிதும் இன்று “அவனது சாதி பற்றியும்.. நடத்தை பற்றியும்” படு கேவலமாக .. அவனை ஒரு பொய்யனாக கருதி எழுதிய ஒவ்வொரு வரிகளும் என்னை மிகவும் வருத்தத்திற்கும் கோபத்திற்கும் உள்ளாக்கின என்றால் சிறுதும் மிகையில்லை. இத்தனைக்கும் நான் சமீப காலங்களில் அரசியலே எழுதாமல் அமைதியாக இருந்து வருபவன் ஒரு வித அமைதியின் தாக்கத்தால். ஆனால் அப்பொழுதே சொன்னேன்... வெமுலாவின் மீது புழுதி வாரித்தூற்றும் மோடி ஆர்.எஸ்.எஸ் பிஜெபி பக்தர்கள்அனைவரும் அந்த ஏழை மாணவனின் மரணத்தால் “தீண்டத்தகாதவர்களாகிப்போவார்கள்” இளைய சமுதாயத்தினரிடம் என்று எழுதினேன். காரணம் அந்த குடும்பம் பற்றி நான் இணையத்தில் படித்த சில செய்திகளுக்கும் இவர்களின் பொய் ப்ரப்புரைகளுக்கும் இருந்த மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள். சுருக்கமாக சில விசயங்களை என் பாணியில் சொல்லி மீதத்தை உங்கள் கருத்துக்கே விட்டு விடுகிறேன்.
ரோஹித்தின் தாய் மாலா எனும் தலித் சாதியில் ரோடுபோடும் வேலையில் இருந்த பெற்றோரின் குழந்தையாக இருந்த போது அவரது வருங்கால எசமானியம்மாவால் தத்தெடுத்து வளர்க்கப்படுகிறார். அவர் மாலா என்று தெரிந்தும் அவ்விசயத்தை வெளியில் சொல்லாமல் வளர்த்து 14 வயதில் அவர் இனத்திலேயே திருமணமும் செய்து வைக்கிறார். வளர்ப்புத்தாய் என்றதும் வழமை போல நினைத்துவிடாதீர்கள். அவர் ஒரு வேலைக்காரி மாதிரிதான் அங்கு இருந்திருக்கிறார். மற்ற குழந்தைகள் போல இவருக்கு எந்த வசதியும் இல்லை. வந்த கணவருக்கு இவரது சாதி பற்றிய ரகசியம் தெரியவர.. குடித்துவிட்டு தினமும் கெட்ட வார்த்தை அடி என்று கொடுமைக்கு உள்ளாகிறார் ரோஹித்தின் தாய். அவரது கிராமத்து நண்பரை பேட்டியெடுத்த பத்திரிகையாளரிடம் ரோஹித்தின் நண்பர் சொல்கிறார்...
“Radhika aunty and her children lived in her mother’s house like servants. They were expected to do all the work in the house while the others sat around. Radhika aunty has been doing household work ever since she was a little girl," Riyaz reveals. If the Child Labour Act had been in force in 1970s, Anjani Devi, the so-called mother of Radhika, could have been charged with keeping a child as domestic help.
Radhika was 14 in 1985 when she was married off to Mani Kumar. Child marriage had been illegal for more than 50 years by that time. Radhika was around 12 or 13 when she discovered to her shock that she was an adopted child and a Mala. “Anjani’s mother, who was still alive then, had badly beaten Radhika and abused her. She was crying near my house. When I asked, she said her grandmother had called her a ‘Mala b****’ for not doing housework and cursed Anjani for bringing her into the house,” says Uppalapaty Danamma, 67.
அதற்குள் 3 குழந்தைகள் வேறு அந்த இளம் வயதில். ஒரு சூழலில் கணவரோடு குடும்பம் நடத்த இயலாமல் தனது வளர்ப்பு தாய்/எசமானியம்மா வீட்டுக்கே திரும்பி விடுகிறார். அங்கும் ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை. வேலைக்காரியாகத்தான் நடத்தப்படுகிறார். இருந்தாலும் அவரது இரண்டு மகன்களும் படிப்பில் மிகவும் கெட்டியாக இருக்கிறார்கள். இருவரும் பட்டப்படிப்பு படித்து முடித்துவிடுகிறார்கள்.. ஹோட்டலில் சர்வராக அல்லது வீடுகட்டும் சித்தாள் வேலை என்று கிடைத்த வேலைகளை செய்துகொண்டு...
இந்த சூழலில் ரோஹித்தின் தம்பி ராஜாவுக்கு ஆந்திர யுனிவர்சிட்டியில் பட்டமேற்படிப்பு படிக்க தேர்வாகி சேர்ந்தும் விடுகிறார். சேர்ந்த சில மாதங்களிலேயே அவருக்கு பாண்டிச்சேரி பல்கலையிலும் சீட் கிடைக்கிறது. அதற்கு சேர முயற்சியெடுக்கையில் 6000 ரூபாய் கட்ட சொல்கிறார்கள். அதற்கு நண்பர்களிடம் கையேந்துகிறார்.. ஆளுக்கு 5, 10 என்று கொடுக்கிறார்கள்... தான் ஒரு பிச்சைக்காரனை போல உணர்ந்ததாக சொல்லுகிறார் அவர்.

இருந்தாலும் மனம் தளராது பாண்டி பல்கலையில் ரோகித்தின் அண்ணன் ராஜா சேர்கிறார். பாண்டி வந்ததும் தங்க இடமில்லாமல் ஒரு ஆசிரமத்தின் ஏதிலிகள் மற்றும் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் 20 நாட்கள் தங்கி இருக்கிறார். இவர் நிலையை பார்த்த ஒரு வசதியான சீனியர் மாணவர் தன்னுடைய வீட்டு வேலைக்காரராக இருந்தால் தன்னுடன் தங்கிக்கொள்ளலாம் என்று சொல்லவே அங்கு குடியேறுகிறார். அவரது வரிகளில் “Andhra University wanted me to pay Rs 6,000 for the transfer certificate. I had no money and my grandmother’s family did not help. I had no option but to ask my Andhra University friends for help. Some of them gave me Rs 5 and 10. That was 2011. It was the first time in my life that I felt like a worthless beggar,” Raja says.

When he first landed in Pondicherry, Raja slept in an ashram for destitute AIDS patients for nearly 20 days. “Then, a senior of mine, who lived outside the campus in an independent house, took me as a domestic help. I would do the housework and he would let me sleep in his house,” Raja says.
Raja talks about the one time he spent five days without food in Pondicherry. “All my college mates were quite well off. They would bring pizzas and burgers from outside campus and nobody would even ask me why I was looking weak. Everybody there knew that I was starving,” he says.
Andhra University wanted me to pay Rs 6,000 for the transfer certificate. I had no money and my grandmother’s family did not help. I had no option but to ask my Andhra University friends for help. It was the first time in my life that I felt like a worthless beggar
– Raja Vemula, Rohith’s brother
Despite the deprivation, he scored 65% in his MSc first year and 70% in his final year. But why did his grandmother not come to his rescue? “You should ask her this question,” Raja says.

இப்படிப்பட்ட வறுமைச்சூழலில் தான் அந்த இரண்டு சகோதரர்களும் இளமையில் கற்றிருக்கிறார்கள். இவ்விசயங்களை சொல்லவிரும்பாமல்தான் ரோஹித் தனது “பிறப்பை ஒரு விபத்து என்றும்” தனது இளமைக்காலத்தை ”தனிமையானது” என்றும் தனது “இறுதிக்கடிதத்தில்” குறிப்பிட்டு இருக்கிறார். இந்த கொடுஞ்சூழலிலும் இந்த இரு இளைஞர்களும் கல்வியோடு இல்லாமல் ஆய்வுக்கும் சென்றிருக்கிறார்கள். கார்ல்சாகனாக மாறவேண்டும் என்ற கனவில் டாக்டர் ரோஹித் வெமுலாவாக ஆக ஆசைப்பட்டது இந்த சூழலில்தான். ஆனால் அனைத்தும் இன்று இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது. டிராபிக் ராமசாமிகளும் சுப்பிரமணிய சாமிகளும் பதவியே இல்லாவிட்டாலும் அதிகாரத்தை சர்வ சாதரணமாக ஆட்டிப்படைக்கும் இதே இந்திய சூழலில்தான் இளவரசன்களும் வெமுல்லாக்களும் எந்த கிரிமினல் காரணங்களும் இன்றி தங்களின் உயிரைமாய்த்துக்கொள்ள நேரிடுகிறது. காரணம் அவர்களின் “பிறப்பு ஒரு விபத்து”.. அந்த விசித்திர இந்தி/துய விபத்து அவர்களை பல்வேறு போராட்டங்களினூடாக வளர்ந்து இளைஞனாக இருந்தபோதும் விாமல் துரத்தி மரணத்தில் தள்ளிவிடுகிறது” !

ஆனாலும் நீ விதைக்கப்பட்டிருக்கிறாய் வெமுலா.. இந்த தேசம் அவைதிக புத்தனின் சீடர்களின் சாம்ராஜ்ஜியம் என்பதை வருங்காலம் உணர்த்தும். அன்று நீ ஒரு பெரு விருட்சமாக .. அசோக சக்கரத்தின் ஒரு காலாய் எங்கள் நினைவில் வீற்றிருப்பாய் ! உனது உழைப்பும் போராட்டமும் அறிவும் மரணமும் நிச்சயம் வருங்காலத்திலும் மரியாதையோடு நினைவுகூறப்படும். வெமுலா ஒரு விபத்தாக இருந்தாலும் வீழ்ந்தபோது அது ஒரு பெரு விருட்சத்தின் விதையாகி இருக்கிறது !

பிகு: ரோஹித்தின் தம்பி ராஜா மற்றும் ரோகித்தோடு இன்னொரு மாணவியும் தங்கியிருந்து பட்டப்படிப்பு படித்து இருக்கிறார் ஒன்றாக... அது அவரது தாய் ராதிகா ! இந்த மாதிரியான ஒரு அழகான போராட்ட குடும்பத்தை... ஒரு அழகான எதிர்காலத்தை அனுபவிக்க முடியாமல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய அமைச்சர் பதவியில் இருந்தாலும் அவர்களது மனசாட்சியும் சமூகத்தின் மனசாட்சியும் கேள்விகேட்டுக்கொண்டே இருக்கும் ;-(
"When Rohith was in final year BSc, Radhika aunty was doing her second year BA and Raja was in BSc first year. First Rohith passed, next year it was aunty and the year after that Raja passed. We all used to study together sometimes. Once we all had exams on the same day,” Riyaz recalls.

Comments

  1. ஆனாலும் நீ விதைக்கப்பட்டிருக்கிறாய் வெமுலா.. இந்த தேசம் அவைதிக புத்தனின் சீடர்களின் சாம்ராஜ்ஜியம் என்பதை வருங்காலம் உணர்த்தும். அன்று நீ ஒரு பெரு விருட்சமாக .

    ReplyDelete
  2. பதிவு அருமை...அதிகார வர்கத்திற்கு ஒரு சாட்டை அடி.

    தொடர்ந்து எழுதுங்கள்... நல்ல வாசிப்பு திறன் உள்ள நல்ல வாசகர்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து எழுதுங்கள். விதை விதைப்பவராக இருங்கள். உங்கள் விதையின் பயனை நாளை நம் இனம் அறுவடை செய்யட்டும்.

    குறிப்பு: இந்த Font ok ஆனால் வாக்கிய இடைவெளி இல்லாமல் நெருக்கமாக இருக்கிறது படிக்க சிரமமாக உள்ளது. இந்த ms word "Arial unicode ms" font பயன்படுத்தலாம் படிக்க நன்றாக இருக்கும். line spaceing 1.15 வைத்துகொள்ளுங்கல் சரியாக இருக்கும்.

    இதோ என் வலைதளம்... http://rkguru.blogspot.in/2016/01/blog-post_30.html

    ReplyDelete
    Replies
    1. ஆம் சீக்கிரம் மாற்றிவிடுகிறேன்

      Delete

Post a Comment

Popular posts from this blog

சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள்

#‎ மாற்றுச்சிந்தனை‬ : ஒரு போட்டி என்றால் அதில் நேர்மை இருக்கவேண்டும். சைக்கிள் ரேஸ்ல டிவிஎஸ் 50 யையும் ஸ்கூட்டரையும் ஓடவச்சுட்டு .. அதையும் அவர்கள் குறுக்குவழியில் ஓட்ட ... கேப்டனையும், வைகோவையும் மருத்துவர் அன்புமணியையும், திருமாவளவனாரையும் , பாஜகவினரையும், தம்பி சீமானையும் ரிசல்ட் பார்த்துவிட்டு கலாய்ப்பது அறிவீனம் மட்டுமல்ல சிந்தனை சீர்கேடும் ஆகும். உங்க பையன் பிட் அடிச்சு பாசானதுக்காக பக்கத்து வீட்டுப்பையன் நேர்மையா பரிட்சை எழுதி பெயிலானதை கிண்டல் செய்வது என்ன நியாயம். க ாசுகொடுக்காமல் தேர்தலை சந்தித்த ஒவ்வொரு தோல்வியாளர்களும் வெற்றியாளர்களே. நேர்மையாளர்களே. அவர்களின் தோல்வியை கிண்டல் செய்யும் அனைவரும் மக்களாட்சியின் அடிப்படை அறியா ஈனப்பிறவிகளே. நேர்மையற்ற வெற்றிகளை கொண்டாடி நேர்மையான தோல்விகளை கிண்டலடிக்கும் மனோபாவம் இருக்கும் வரை தமிழனை வீழ்த்த ராஜபக்‌ஷேக்கள் வேறு தனியாக தேவையில்லை. கருணாக்களே கூட போதும் ! தோல்வியடைந்த இவர்களுக்கெல்லாம் ஓட்டளித்த சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள் அனைவருமே வருங்கால நேர்மையான தமிழகத்தின் சிற்பிகள். கழிசடைகளல்ல அவர்கள். அவர்கள் அனைவர

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி

சின்னைய்யாவுக்கு வணக்கம் . . . அந்த முழுப்பக்க விளம்பரங்கள், மேடை அமைப்புகள், லைட்டிங்... டிஜிட்டல் குறும்படங்கள் எல்லாமே கேப்டனை சி கிளாஸ் ரேஞ்சுக்கும் உங்களை ஏ க்ளாஸ் ரேஞ்சுக்கும் காண்பித்தன என்றால் மிகையில்லை. (ஸ்டாலின் அவர்களின் மெகா புரோகிராம் தான் எப்படி சவால் விடும் என்று பார்க்கனும்) .அதுவும் அந்த அரங்கில் பாதியை பலருக்கும் சீட் போட்டு மீதம் உள்ள பிரமாண்டமான பாதியில் சுரே மைக் போட்டு ஒரு மேற்கத்திய கிருத்துவ பிரச்சாரகர் மாதிரி ஒரு ஸ்டைலில் கையை விரித்து குவித்து நடந்துகொண்டே ... தெளிவாக “ உங்கள் சின்னையாவாகிய நான்”... சாரி... உங்க மக்கள் பேச்சை கேட்டு கேட்டு அப்படி தோணிச்சு... “அன்பு மணியாகிய நான்” என்று முழுப் பொறுப்பேற்று கார்ப்பரேட் லீடர்ஷிப் ஸ்டைலில் ஆரம்பித்ததும் அட்டகாசம் தான் ! தமிழகத்தின் முதல் கையெழுத்தையும் போட்டுவிட்டீர்கள். சரக்கும் முடிந்தது. அல்ரெடி 2 லட்சம் கோடி பற்றாக்குறையை அம்மையார் உங்களுக்கு விட்டுச்செல்லவேண்டிய சூழல் !! அதற்கும் வட்டி வேறு இருக்கு என்று சொன்னீர்கள்.. அதற்கப்புறம் இலவச கல்வி முதல் பல்வேறு அருமையான நலத்திட்டங்களை உண்மைய

சூனா சாமியும் ஜே.என்.யூ வும் . . .

ஜே.என்.யூ மீது யார் கைவைத்தாலும் இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் உங்கள் மடத்தனம் வெளிப்படுத்தப்படும். அப்படியென்ன பெருமை அந்த பல்கலை கழகத்துக்கு? அவர்களின் இந்த நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் அலசுபவர்கள்.. இளைஞர்கள்... மூடர் கூடம் அல்ல . . . சிந்தனைகளின் சிகரங்கள் வாழ்ந்த வாழும் இடம்.  கன்ஹைய குமாரை கைது செய்த உடன் நடந்த போராட்டங்களுக்கு தலைமை வகித்து ஜான்சி ராணி போன்று போராடும் வீரப்பெண் என்று பலராலும் அழைக்கப்படும் செஹ்லா ரஷீத் என்னும் பெண்மணி/மாணவியின் பேச்சை மொழி புரியாவிட்டாலும் கேட்டுப்பாருங்கள் புரியும். அவரை ஒரு முறை ஆர்னாப் கேள்விகேட்டபோது சொன்னார்... நாங்கள் இடது சாரிகள் என்று விமர்சிக்கும் அத்தனை பேருக்கும் ஒரு கேள்வி... நாங்களேதான்.. டாட்டா நானோவுக்கு கம்யூனிஸ்ட் அரசாங்கம் நந்திகிராமத்தை தாரை வார்த்தபோது போராட்டத்தை துவக்கியவர்கள். சுதந்திர சிந்தனை பற்றீ யாரும் எங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு நாங்கள் பண்பட்டவர்கள். ராம் தேவுக்கு எதிராக போராடினோம்... ஆனால் அவருக்கே கடிதம் எழுதினோம்... ஏன் அந்த கூட்ட்டத்தில் அவர் கலந்துகொள்ளக்கூடாது எ